காங்கேசன்துறையில் 5 இந்தியப் படகுகளும் 4 இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவுக்கு ஏலம்!

யாழ்., காங்கேசன்துறையில் இருந்த 5 இந்தியப் படகுகளும் இன்று 4 இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த வேளை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகள் நேற்று முதல் ஏலத்தில் விடப்படுகின்றன. இதற்கமைய இன்று காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் தரித்து வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளால் ஏலத்தில் விடப்பட்டன. இதன்போதே இந்த 5 படகுகளும் 4 இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.

இதேவேளை, நாளை கிளிநொச்சி மாவட்டம், கிராஞ்சியில் தரித்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகள் ஏலத்தில் விடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.