ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் உக்ரேன்!

தனது நாட்டு எல்லையில் தீவிரமாகி வரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான சந்திப்பு ஒன்றை நடத்த நடத்த ரஷ்யா மற்றும் வியன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய உறுப்பு நாடுகளுக்கு உக்ரேன் அழைப்பு விடுத்துள்ளது.

எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்க வேண்டும் என்றும் தாங்கள் அலுவல்பூர்வமாக விடுத்த வேண்டுகோள்களை ரஷ்யா புறக்கணித்துவிட்டதாக, உக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் திட்டத்தில் ‘வெளிப்படைத்தன்மைக்காக’ அடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்நாட்டுடன் சந்திப்பு ஒன்றுக்கு வேண்டுகோள் விடுப்பதே “அடுத்த நடவடிக்கை” என அவர் தெரிவித்துள்ளாா்.

யுக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது என்றாலும், படையெடுப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று மறுத்து வருகின்றது.

ஆனால், ரஷ்யா இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக, சில மேற்கு நாடுகள் எச்சரித்துள்ளன. ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

உக்ரேனிலிருந்து வெளியேற வேண்டும் என அநேகமான நாடுகள் தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன. சில நாடுகள், தங்கள் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளன.

உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த அனைத்து வீரர்களையும் தலைநகர் கீவ்வில் இருந்து திருப்பி அழைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக, மூன்று ஆதாரங்களை மேற்கோளிட்டு சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஒப்பந்தமான வியன்னா உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி, ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்து அந்நாட்டிடம் வெள்ளிக்கிழமை தாங்கள் பதில்களை கோரியதாக, டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

“மற்ற நாட்டை அச்சுறுத்தும் வகையில், தங்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடாது என்ற, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் விதிமுறை குறித்து ரஷ்யா அக்கறை கொள்ளுமானால், நெருக்கடியை மட்டுப்படுத்துவதற்காகவும், அனைவருக்குமான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், ரஷ்யா எதிர்வரும் நாட்களில் படையெடுப்பை நடத்த தயாராகி வருகிறது என்பதற்கான எவ்வித ஆதாரத்தையும் தான் பார்க்கவில்லை என கூறியுள்ள யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இதுகுறித்து பெரும் அச்சத்தைப் பரப்பும் வகையிலான செய்திகளை விமர்சித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.