இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை..; கோர்ட் உத்தரவு.

இந்திய சினிமா இசை உலகில் முடிசூடா மன்னன் இசைஞானி இளையராஜா.

இவர் பல இந்திய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார.

இந்த நிலையில் தான் இசையமைத்த படங்களின் பாடல்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் இளையராஜா.

ஒப்பந்தம் காலாவதியான பிறகும் மனுதாரரின் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு உரிய காப்புரிமையை சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பெறவில்லை என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இசைப்பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது “எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு” பிரத்யேகமான உரிமையாகும் என்று வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி வந்த எக்கோ, அகி மியூசிக் போன்ற நிறுவனங்களுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள், எக்கோ, அகி, கிரி டிரேட்டிங், யூனிசிஸ் ஆகிய இசை நிறுவனங்கள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.