படத்திலிருந்து நீக்கப்படுகிறதா அரபிக் குத்து. வெளியான அதிர்ச்சி தகவல்.

இளைய தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலின் சிங்கிள் ப்ரோமோ ஏற்கனவே வெளியானது. இதில் விஜய் போனில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சனிடம் ஆகியோரிடம் பேசுகிறார். அந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. பிறகு அரபிக் குத்து படத்தின் Lyric வீடியோ வெளியானது.

அது வெளியான இரண்டு நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அந்த அரபிக் குத்து பாடல் படத்தில் இடம் பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் செல்லமா பாடல் படத்தின் ரிலீஸ்க்கு முன்பே வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் படத்தின் இறுதியில் அந்த பாடல் இடம் பெற்றது. அதே போல அரபிக் குத்து பாடலும் இடம் பெறலாம் என்ற பேச்சும் எழுந்து வருகிறது.

பீஸ்ட் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள, நெல்சன் எழுதி இயக்கிய மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரித்த அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருடன் இணைந்து செல்வராகவன், யோகி பாபு, வி.டி.வி கணேஷ்,கிங்ஸ்லி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

“தளபதி 65” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட விஜய்யின் நடிக்கும் 65வது படத்தின் தயாரிப்பு உரிமையை சன் பிக்சர்ஸ் 2020 ஜனவரி தொடக்கத்தில் வாங்கியது, மேலும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கவிருந்தார். இருப்பினும், முருகதாஸ் தனது சம்பளத்தை குறைக்க மறுத்ததால், தயாரிப்பாளர்கள் முருகதாஸை அக்டோபர் 2020 இல் படத்திலிருந்து வெளியேற்றினர். பின்னர் நெல்சன் இந்த ​படத்திற்கு ஒரு புதிய ஸ்கிரிப்டை எழுதினார்.

Leave A Reply

Your email address will not be published.