கத்தாரிலிருந்து இலங்கைக்கான தினசரி விமானச் சேவையை ஆரம்பித்தது கத்தார் ஏர்வெய்ஸ்.

கத்தாரிலிருந்து இலங்கைக்கான தினசரி 5வது விமானச் சேவையை கத்தார் ஏர்வெய்ஸ் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலம் கத்தாரிலிருந்து இலங்கைக் நாள் ஒன்றுக்கு 4 நேரடி விமானச் சேவைகைள் நடைபெற்று வந்தது. தற்போது கத்தார் ஏர்வெய்ஸ் நிருவாகமானது இலங்கைக்கு தினசரி பயணிக்கும் விமானங்களின் எண்ணிக்கையை 5ஆக உயர்த்தியுள்ளது.

விமானச் சேவைகளின் எண்ணிக்கை 5ஆக அதிகரிக்கப்பட்டதன் பின்னர், கத்தார் ஏர்வெய்ஸ் விமானப் பயணங்களின் தினசரி நாட்காட்டி பின்வருமாறு அமையும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

கத்தார் எர்வெய்ஸ்க்குச் சொந்தமான QR659, QR663, QR665, QR667 மற்றும் QR655 ஆகிய விமானங்களை கத்தாரிருந்து இலங்கைக்கு இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.