இலங்கை உதைபந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸ் மாலைதீவில் திடீர் மரணம் : மரணத்தில் மர்மம்?

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உதைபந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.

மாலத்தீவில் வலென்சியா அணிக்காக விளையாடி வந்த 31 வயதான இவர், நேற்று இரவு தனது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.
திவேஹி பிரீமியர் லீக்கில் காயம் காரணமாக டக்சன் நேற்று தனது அணிக்காக விளையாடவில்லை என மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மரணம் தொடர்பில் மாலைதீவு ஊடகங்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்ற போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், சம்பவம் தொடர்பில் மாலைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யோகேந்திரன் டக்சன் புஸ்லஸ் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி மன்னாரில் பிறந்தார் மற்றும் இலங்கை தேசிய அணிக்காக பல தடவைகள் விளையாடிய திறமைமிக்க கால்பந்தாட்ட வீரர் ஆவார்.

இந்தியாவுக்கு எதிரான 2021 SAFF டிராபி போட்டியில் அவர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2020 ஆம் ஆண்டில், டக்சன் புஸ்லாஸ் மாலத்தீவில் உள்ள TC ஸ்போர்ட்ஸ் கிளப்பில் கையெழுத்திட்டார், பின்னர் மாலத்தீவில் உள்ள வலென்சியா கிளப்பில் சேர்ந்தார்.
அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளப்பான வலென்சியா ஸ்போர்ட்ஸ் கிளப்,
டக்சனின் மரணம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை தேசிய உதைபந்தாட்ட வீரர் டக்சன் புஸ்லஸ் இன்று காலமானார் என்ற செய்தி 
எமக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

கிளப் வலென்சியா நிர்வாகம், எங்கள் பயிற்சி ஊழியர்கள், வீரர்கள் மற்றும் 
அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்த துயரமான சந்தர்ப்பத்தில் 
அவரது குடும்பத்தினருக்கு எங்கள்  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
டக்சன் எங்கள் அணியின் வலுவான தூணாக இருந்தார். 

அவருடைய அகால மறைவு உண்மையில் ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கும். 
டக்சன் ஒரு உண்மையான மனிதர், ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு அடக்கமான மனிதர் 
என்று எப்போதும் நினைவுகூரப்படுவார்.

Leave A Reply

Your email address will not be published.