உக்ரைன் வீழ்ந்தால் மொத்த ஐரோப்பாவும் வீழ்ச்சியடையும்….

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பிய நாடுகளில் கடும் கண்டனப் போராட்டங்கள் நடைபெறும் சூழலில் காணொலி வாயிலாக அவர்களிடம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உரை நிகழ்த்தினார்.

இதன்படி ,ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் ஜெலன்ஸ்கியின் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் கையில் உக்ரைன் கொடிகள் மற்றும் தேசியக் கொடியின் வண்ணங்கள் மிக்க உடைகளுடன் திரண்டனர்.

அதற்கமைய ,உக்ரைன் தாக்குப் பிடிக்காமல் வீழ்ந்தால் மொத்த ஐரோப்பாவும் வீழ்ச்சி அடையும் என்று ஜெலன்ஸ்கி தமது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் இதே போல் ஜார்ஜியாவில் ராட்சதத் திரையில் ஜெலன்ஸ்கி பேச்சைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.ரஷ்யாவுடன் 2008 ஆம் ஆண்டு ஜார்ஜியா போரை எதிர்கொண்டது. இறுதியில் இரண்டு மாகாணங்களுக்கு ரஷ்யா தனிநாடு அங்கீகாரம் அளித்தது.

Leave A Reply

Your email address will not be published.