உக்ரைன்- ரஷியா இடையே 3-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது.

சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது.

இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது. உக்ரைன்-ரஷியா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே நடந்த 2 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன

உக்ரைன், ரஷியா இடையே மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று உக்ரைன் தூதுக்குழுவை சேர்ந்த டேவிட் அராகாமியா ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உக்ரைன், ரஷியா இடையிலான மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷியா நாட்டை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் பெலாரஸ் மற்றும் போலந்து எல்லையில் உள்ள அலுவலகத்தில் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.