ரஷியா – உக்ரைன் இடையே மத்தியஸ்தம் செய்யத்தயார் சீனா.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 12-வது நாளாக நீடிக்கிறது. இருநாடுகளுக்கும் இடையேயான போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பாக உள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், “சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான உறவு உறுதியாக இருக்கிறது. இருந்த போதிலும், உக்ரைன் விவகாரத்தில், தேவைப்படும்போது அமைதிக்காக உலக நாடுகளுடன் சேர்ந்து மத்தியஸ்தம் செய்து வைக்க சீனா தயாராக இருக்கிறது. அதேபோல் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு சீனா அனுப்பும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.