“கிரைமியா ரஷ்ய பகுதியாக வேண்டும்” போரை நிறுத்த கடும் நிபந்தனைகளை விதித்த ரஷ்யா.

யுக்ரேன் ரஷ்யா விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், “எந்த நேரத்திலும்” தமது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடியும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர், டிமிட்ரி பெஸ்கோஃப் இது குறித்துப் பேசியபோது, யுக்ரேன் கிரைமியாவை ரஷ்யாவின் பகுதியாகவும் டொனியட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர நாடுகளாகவும் அங்கீகரிக்க வேண்டும்.

இதைத் தவிர யுக்ரேன் தனது அரசியலமைப்பைத் திருத்த வேண்டும். நேட்டோ போன்ற எந்தவொரு கூட்டமைப்பிலும் இணைவதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று பெஸ்கோஃப் கூறியுள்ளார்.

மேலும், யுக்ரேனின் “ராணுவ விலக்கலை” ரஷ்யா முடித்து வைக்கும் என்றும் கூறியவர், இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ரஷ்ய ராணுவ நடவடிக்கை உடனடியாக நின்றுவிடும் என்றும் கூறினார்.

ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர், யுக்ரேனில் எந்தவொரு பிராந்திய கோரலையும் எங்கள் நாடு விரும்பவில்லை என்று வலியுறுத்துகிறார்.

Leave A Reply

Your email address will not be published.