வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை.

24 கரட் ஒரு பவுன் ரூபாய் 135,000/-
22 கரட் ஒரு பவுன் ரூபாய் 125,000/-

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அதற்கு ரஷ்ய – உக்ரைன் போர் சூழலும் ஒரு காரணமாகும்.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இலங்கையிலும் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 135,000 ஆகும். மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.125,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.