மறைந்த ஷேன் வார்னேவின் உடல் ஆஸ்திரேலியா சென்றடைந்தது…!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதன்பின் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் இன்று அதிகாலை பாங்காக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், எட்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஷேன் வார்னின் உடல் ஏற்றிச் சென்ற தனி விமானம் அவரது சொந்த நகரமான மெல்போர்னில் தற்போது தரையிறங்கியுள்ளது. விமானம் தரையிறங்கியபோது வார்னின் குடும்பத்தினர் மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் ஹெலன் நோலன் உட்பட நண்பர்கள் விமான நிலையத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா சென்றடைந்த வார்னேவின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிசடங்குகளை செய்ய உள்ளனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும், மறைந்த ஷேன் வார்னின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக அவரது ரசிகர்கள் கூட்டம் விமான நிலையத்தில் இருந்தனர்.

வார்னேவின் இறுதிச்சடங்கில், தங்களது கிரிக்கெட் ஹீரோவுக்கு அஞ்சலி செலுத்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.