புதிய Deltacron கிருமி வகையை உறுதிசெய்தது : உலகச் சுகாதார நிறுவனம்

உலகச் சுகாதார நிறுவனம், புதிய Deltacron வகைக் கிருமி உருவாகியிருப்பதை உறுதிசெய்துள்ளது.

அது டெல்ட்டா, ஓமக்ரான் கிருமி வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளது.

நிறுவனத்தின் கொரோனா கிருமிவகை குறித்த ஆய்வுப் பிரிவின் இயக்குநர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove) அதனை உறுதிசெய்தார்.

அந்த வகைக் கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், கிருமி வகை குறித்து கவலைப்படுவதா என்பதை இப்போது உறுதி செய்யமுடியாது என்று நிறுவனம் சொன்னது.

தற்போது சில சம்பவங்கள் பிரான்ஸ், இத்தாலி, நெதர்லந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் சொன்னது.

அதனுடன் தொடர்புடைய சுமார் 30 சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் சொன்னது.

கவலைக்குரியதா?

உருமாற்றம் பெற்ற கிருமி வகைகளில் இது முதலும் அல்ல, முடிவும் அல்ல என்பதால் இதைப் பற்றி இப்போதைக்கு அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதிய கிருமி குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தீவிரத்தில் எந்த மாற்றமும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகில் இதுவரை ஆக அதிகமாகப் பரவிய கிருமி வகைகளில் ஓமக்ரான் முதன்மையானது என்று உலகச் சுகாதார நிறுவனம் சென்ற மாதம் கூறியது.

Leave A Reply

Your email address will not be published.