தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்…
அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கு அமைய தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எவ்வகையிலேனும் தீர்வொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சருடனும் பஸ் உரிமையாளர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள வீதத்திற்கு அமைய, பஸ் உரிமையாளர்களுக்கு ஏதேனுமொரு வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், உடனடியாக பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.
பஸ் கட்டணத்தை அதிகரிக்காது, மாற்று வழிகளில் நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.