மீண்டும் ஜனாதிபதி செயலகம் முற்றுகை! குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படை (Video)

சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலக முன்றலை சென்றடைந்தது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பி வரும் நிலையில், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், கடந்த 15ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.