ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட சந்திரிகா வியூகம்! – பொதுவேட்பாளரைக் களமிறக்க முயற்சி.

2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஈடுபட்டுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது.

சில எதிரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான வியூகத்தை அவர் வகுத்து வருகின்றார் எனவும், இரகசியப் பேச்சுகள்கூட இடம்பெற்று வருகின்றன எனவும் தெரியவருகின்றது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள அரசியல் பின்புலம் கொண்ட ஒருவரையே சந்திரிகா அம்மையார் இலக்குவைத்துள்ளார் எனவும், தமிழ் பேசும் மக்களின் ஆதரவைப் பெறும் வகையிலுமே அந்த நபரைச் சந்திரிகா, தெரிவுப் பட்டியலில் முன்னிலையில் வைத்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு சந்திரிகா அம்மையாரே திரைமறைவில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.