மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை.

மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ம், 09ம் திகதிகளில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நடமாடும் சேவையானது கால மாற்றம் செய்யப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09ம் மற்றும் 10ம் திகதிகளில் இடம்பெறுமென வடமாகாண மோட்டார் வாகணப் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சி.சுஜீவா அவர்கள் அறியத்தந்துள்ளார்.

பொதுமக்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் சேவைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் என்பன இணைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09ம் மற்றும் 10ம் திகதிகளில் வடக்கு மாகாண சபை வளாகம், கைதடியில் மாபெரும் நடமாடும் சேவை ஒன்றினை காலை 09.00மணி தொடக்கம் மாலை 03.00மணி வரை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

குறித்த நடமாடும் சேவையூடாக பொதுமக்களுக்கு பின்வரும் சேவைகள் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

01. 2014/2015ம் ஆண்டின் பட்ஜட்டில் ஆலோசிக்கப்பட்டதன் படியாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கான நிபந்தனைகளை நீக்குதல்.
02. மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு இதுவரை ஆவனங்கள் சமர்ப்பிக்கப்பட்டு நிலுவையாக உள்ள விடயங்கள்.
03. புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல்.
04. அனைத்து வாகனங்களுக்குமான அடையாள மற்றும் எடை சான்றிதழ் வழங்குதல்.
05. உடமை மாற்ற விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளல்.
06. ஓட்டுநர் பரீட்சார்த்த தேர்வு.
07. தனிப்பட்ட மோட்டார் கோச் இனை ஒமினி பஸ் ஆக மாற்றம் செய்தல்.
08. வாசித்தல், எழுதுதலில் விசேட தேவை உடையோரிற்கான சாரதி அனுமதிப்பரீட்சை.
09. வாகன உடமைமாற்ற விடயத்துடன் தொடர்புடைய பிரதேச செயலக அலுவலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
10. வீதி பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு
எனவே இவ் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாது குறித்த நடமாடும் சேவையில் வடமாகாணத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பங்குபற்றிபயன்பெறுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் தங்களது சேவையை இலகுபடுத்த முன்கூட்டியே தங்களது பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் வடக்கு மாகாண மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 021 2219297 இல்லது 021 2216695 தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.