பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார்?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரிப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கபட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷபாஸ் ஷெரிப் விரைவில் நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.