டெல்லி அணியில் இணைந்த நட்சத்திர ஆல் ரவுண்டர்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆர்சிபிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைந்தது டெல்லி அணியை மேலும் வலுவடைய செய்துள்ளது.

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் நன்றாக ஆடிவருகிறது. இந்நிலையில், இப்போது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷின் வருகை அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷை ஏலத்தில் ரூ.6.5 கோடிக்கு எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. ஆனால் அவர் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக டெல்லி அணியுடன் இணையவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடிவந்த மிட்செல் மார்ஷ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்துவிட்டார்.
வரும் 16ஆம் தேதி(நாளை) டெல்லி அணி ஆர்சிபிக்கு எதிராக ஆடவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் இணைந்திருப்பது டெல்லி அணிக்கு வலுசேர்த்துள்ளது.

அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங் என முழுமையான ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ். ஏற்கனவே பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த், பவல், சர்ஃபராஸ் கான், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர் என நல்ல பேட்டிங் ஆர்டர், சிறந்த ஆல்ரவுண்டர்களை கொண்டுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ்அணிக்கு மிட்செல் மார்ஷின் வருகை நல்ல பேலன்ஸை தரும்.

21 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மார்ஷ் 225 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 36 போட்டிகளில் ஆடி 885 ரன்களை குவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 50 பந்தில் 77 ரன்களை விளாசினார் மிட்செல் மார்ஷ்.

அவரது பேட்டிங் தான் ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் பெரிய இன்னிங்ஸ் ஆடும் மேட்ச் வின்னர் மிட்செல் மார்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.