தொடரிலிருந்து கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் விலகல்.

கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.கொல்கத்தா அணி இதுவரை 5 போட்டிகளில் 3 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது .

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார் .

இந்த தொடரில் கொல்கத்தா அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடிய சலாம், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார் இதனால் மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.