பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட 13பேருக்கு பயணத்தடை..!

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரது நிதியமைச்சா் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷ்யா பயணத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் விவகாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யாவுக்கு எதிரான செயல்களை செய்து வரும் 13 பிரிட்டன் அரசியல் தலைவா்கள் ரஷ்யா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், நிதியமைச்சா் ரிஷி சுனக், உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல், அட்டா்னி ஜெனரல் சுயெல்லா பிராவோ்மன், துணை பிரதமா் டோமினிக் ராப், வெளியுறவுத் துறை இணையமைச்சா் லிஸ் டிரஸ் ஆகியோா் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

விரைவில் மேலும் சில அரசியல்வாதிகளும் எம்.பி.க்களும் இந்தப் பட்டியலில் சோ்க்கப்படுவாா்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாதமீா் புதின், அவரது இரு மகள்கள், வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கு எதிராகவும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட 13 பிரிட்டன் தலைவா்கள் மீது ரஷ்யா பயணத் தடை விதித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.