கோட்டாகோகம கூடாரங்களை அகற்றியது சட்டவிரோதம்:போராட்டக்காரர்களிடமே திரும்ப வழங்கிய பொலிசார்! (Video)

இன்று (17) காலை காலி பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக கோட்டகோகமவில் ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை பொலிஸார் அகற்றியதையடுத்து , காலி பிரதேசத்திலுள்ள சட்டத்தரணிகள் குழுவொன்று முன்வந்து வாதாடிய பின் அவற்றை மீள வழங்குவதாக போலீசார் உறுதியளித்துள்ளனர்.

காலியில் வாழும் இளைஞர்கள், சிவில் ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கிய குழுவினால் ‘காலிமுகத்திடலை மைதானத்தை தனிமைப்படுத்த மாட்டோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களது பெரும் எதிர்ப்புக்கு மத்தியல் போலீசார் , அங்கிருந்த கூடாரங்களை பலவந்தமாக அகற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று இன்று பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸாருடன் கலந்துரையாடிய போது , இது குறித்து புகார் எதுவும் வராத நிலையிலேயே கூடாரத்தை போலீசார் அகற்றியமை தெரிய வந்தது.

போலீசாரே அவ்வாறு செய்ய முடிவு செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், சட்டத்தரணிகள் குழுவிற்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், போராட்டக்காரர்களை அமைதியான முறையில் போராட்டத்தை தொடருமாறு பொலிஸார் அறிவுறுத்தியதோடு, மீட்கப்பட்ட கூடாரத்தை திருப்பி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்க காவல்துறை திரும்ப வழங்கியது.

காலி பொலிஸாரால் இன்று காலை இடித்து அகற்றப்பட்ட கோட்டகோகம காலி கிளையை மீண்டும் கட்டியெழுப்ப காலியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்பு இருந்ததை விட இப்போது அதிக மக்கள் ஒன்றாக கூடியுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மீண்டும் முன்னைய விட சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது.
வீடியோ கீழே:-

இது இன்று ஆர்ப்பாட்டக்காரர்களது கூடாரங்களை போலீசார் அகற்றிய காட்சி:

Leave A Reply

Your email address will not be published.