விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டார் ஜனாதிபதி!

“ஜனாதிபதி, விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டார். இப்போது அவர் தவறிழைத்துவிட்டோம் புலம்புகின்றார்” என்று ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

“தலை மாறி ஆட்சி அமைத்தாலும் மக்கள் இந்த அரசை நம்பவில்லை. மக்களின் நம்பிக்கையில்லாத ஆட்சியாளரால் இந்த நெருக்கடியிலிருந்து வெளிவர முடியாது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு நாட்டுக்கு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது நமது கடமை. ஆனால், இது நீங்கள் உருவாக்கியது நெருக்கடி.

விவசாயப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எத்தனை தடவை எழுப்பப்பட்டது?

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, விவசாயிகளைத் தூண்டு விடுவதாகக் கூறினீர்கள்.

இப்போது தாம் தவறிழைத்துவிட்டோம் என்று ஜனாதிபதி புலம்புகின்றார்.

நாட்டுக்கு ஒரு கொடிய பேரழிவை ஏற்படுத்திய ஜனாதிபதியைக் குறை சொல்ல வேண்டுமா?

அவர் விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டார். இப்போது அவர் புலம்புகின்றார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.