மாவை தலைமையில் தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மார்டின் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் விசேட கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது மே தினக் கூட்டம் மற்றும் தந்தை செல்வா நினைவேந்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சிறிதரன் எம்.பி. கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.