கெயில், வார்னர், கோலியின் பல ஆண்டு சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்.

ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸனின் 37-வது போட்டியில், ரோகித் ஷர்மாவின் மும்பை அணியும், கே.எல்.ராகுலின் லக்னோ அணியும், விளையாடியது.

லக்னோ அணி ஏழு ஆட்டங்களில் நான்கை வென்று எட்டுப் புள்ளிகளோடு புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், மும்பை ஏழு ஆட்டங்களில் ஏழையும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசிப் பத்தாவது இடத்தில் இருக்கின்றன. லக்னோ அணியில் ஆவேஷ்கான் விளையாட காரணத்தினால் அவருக்குப் பதிலாக மோசின்கான் இடம்பெற்றிருக்கிறார். மும்பை அணியில் மாற்றம் எதுவுமில்லை.

முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ அணிக்காக பேட்டிங்கை துவங்க வந்த குயின்டன் டிகாக் பும்ராவின் ஓவரில் ஆரம்பத்திலேயே வெளியேறினார். அடுத்து வந்த மனீஷ்பாண்டே 22 பந்தில் 22 ரன்னே அடித்தார். ஸ்டாய்னிஸ் தீபக் ஹூடா இருவருமே உடனுக்குடன் வெளியேறினார்கள்.

ஆனால் ஒருமுனையில் நங்கூரமிட்ட கேப்டன் கே.எல்.ராகுல் தன் கிளாஸ் பேட்டிங்கால் முதல் ஓவரிலிருந்து இறுதி ஓவர் வரை மும்பை பந்துவீச்சாளர்கள் மேல் தொடுத்த தாக்குதலை நிறுத்தவே இல்லை. ஏற்கனவே இந்தத் தொடரில் மும்பைக்கு எதிராகச் சதமடித்திருந்த கே.எல்.ராகுல் மீண்டும் இரண்டாவது சதத்தை அடித்ததோடு 62 பந்துகளில் 103 ரன்களோடு ஆட்டமிழக்காமலும் நின்றார். இறுதியில் லக்னோ அணி 168 ரன்களை குவித்தது.

ஒரு அணிக்கு எதிராக முதன் முதலில் ஐ.பி.எல்-ல் மூன்று சதங்களை அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

கே.எல்.ராகுல் – மும்பை- 3
கிறிஸ் கெயில் – பஞ்சாப்- 2
டேவிட் வார்னர்- கொல்கத்தா- 2
விராட் கோலி- குஜராத் லயன்ஸ்- 2

Leave A Reply

Your email address will not be published.