காத்து வாக்குல ரெண்டு காதல்……..

விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு கடின உழைப்பை போட்டு உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். 2 டாப் ஹீரோயின்ஸ் மற்றும் 1 பெரிய ஹீரோ வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் பக்கா பேமிலி ரொமான்டிக் என்டர்டெயினர் ஆக அமைந்துள்ளது.

நயன்தாரா விட சமந்தா ரசிகர்கள் படத்தை ஏகபோகமாக வரவேற்று விசில் சத்தத்தின் மூலம் தங்கள் அன்பை பொழியும் சீன்கள் திரையரங்குகளில் அரங்கேறி வருகிறது.

விஜய் சேதுபதியோட ஒன் லைன் மற்றும் நீண்ட பெரிய வசன காமெடி சீன் மட்டுமல்ல expression கூட சூப்பரா ஒர்கவுட் ஆகியுள்ளது.

படத்தோட பெரிய ப்ளஸ் ஆக மியூசிக் அமைந்துள்ளது. செம காமெடி மற்றும் ஹீரோயின்ஸ்கள தேவதையா காமிச்சருக்காங்க. எதிர்பார்த்த அளவிற்கு இருக்கானு கேட்டா பக்கா காமெடி ட்ரீட் கொடுத்து ரசிகர்களை disappoint பண்ணல ங்கிறது தான் உண்மை.

காதல், செண்டிமெண்ட், டைலாக் டெலிவரி, பாசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். முகம் சுளிக்கும் அளவிற்கு காட்சிகள் எதுவும் வைக்காமல், அழகாக மூவரின் காதல் கதையை கையாண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.