ஐ.பி.எல் கிரிக்கெட் லக்னோவை சமாளிக்குமா பஞ்சாப்? – இன்று மோதல்.

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். அந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் 88 ரன்கள் அடித்தார்.

அதேசமயம் நடப்பு தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள கேப்டன் மயங்க் அகர்வால் மற்ற ஆட்டங்களில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. வலுவான தொடக்கம் கிடைக்க அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை பதம் பார்த்தது. அந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் சதம் விளாசி பிரமாதப்படுத்தினார்.

இந்த நிலையில், புனேவில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. லக்னோ அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

Leave A Reply

Your email address will not be published.