ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது

இம்முறை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட உள்ளனர்.

இன்று முற்பகல் இவர்களுடனான விசேட கலந்துரையாடல் நடைபெற இருப்பதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்தக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட உள்ளன.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் தெரிவிற்காக மேலும் 6 மாத கால அவகாசம் வழங்குவதற்கு நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.