இன்று இலங்கை வந்துள்ள அண்ணாமலை.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலையில் இலங்கை புறப்பட்டு சென்றார். அங்குள்ள தமிழ் எம்.பி.க்கள் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று முதல் 3 நாட்கள் அண்ணாமலை இலங்கையில் தங்கி இருக்கிறார். நாளை அங்கு நடைபெறும் தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இலங்கையில் போரின்போது பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை மோடி அறிவித்து சுமார் 40 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஆண்டு தோறும் மே தினத்தை அங்குள்ள தொழிலாளர் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தொழிலார் தின நிகழ்ச்சியில் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை விழாவுக்கு அழைத்தனர். மோடி கலந்து கொள்ளாத நிலையில் அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலையை கலந்து கொள்ள மோடி அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கை மக்களுக்கு மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அரிசி, எரிபொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் இலங்கை சென்றுள்ள அண்ணாமலை தமிழர்கள் வசிக்கும் பகுதி உள்பட பல இடங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார்.

சீனாவால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் இலங்கையில் சீனா காலூன்றுவது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அந்த நாட்டில் 6 லட்சம் சீனர்கள் குடியுரிமை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழர்கள் பகுதியில் மிகப்பெரிய கட்டுமானங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலையின் பயணம் பல்வேறு செயல்கள் கொண்ட களநிலவர ஆய்வாகவே திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தனது இந்த பயணத்தின்போது இலங்கை மக்களின் துயரங்கள் உள்பட பல செயல்களை பார்வையிட்டு பிரதமர் மோடியிடம் விளக்குவார் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.