ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ,முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி.

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.மும்பை டி.ஓய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,படிக்கல் ,களமிறங்கினர் . அணியின் ஸ்கோர் 27 ரன்னாக இருந்தபோது படிக்கல் ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த கேப்டன் சாம்சன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதன் பிறகு வந்த டேரில் மிட்செல் பட்லருடன் இணைந்து நிதானமாக விளையாடினார் .டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார் .

மறுபுறம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய பட்லர் அரைசதம் அடித்தார் அவர் மும்பை அணியின் ஹிரித்திக் ஷோக்கீன் வீசிய ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் பறக்க விட்டார் .தொடர்ந்து விளையாடிய பட்லர் ,52 பந்துகளில் 67 ரன்கள் ,எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது .இதனை தொடர்ந்து 159 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா .இஷான் கிஷன் களமிறங்கினர் .கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.தொடர்ந்து இஷான் கிஷன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் சூர்யகுமார் யாதவ் ,திலக் வர்மா இருவரும் சிறப்பாக விளையாடினர் .நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் .

மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார் .தொடர்ந்து விளையாடிய அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து திலக் வர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த டிம் டேவிட் அதிரடியாக 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார் . இதனால் மும்பை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது .

இந்த தொடரில் இது மும்பை அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

Leave A Reply

Your email address will not be published.