காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தால் கதறும் விஜய் ரசிகர்கள்!

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஒன்று சேர்ந்து முக்கோண காதல் கதை வடிவில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இருந்து வெளியான 2 2 2, நான் பிழை உள்ளிட்ட பாடல்கள் இளசுகளின் ரிங்டோனாக மாறியுள்ளது. இதில் khatija வாக சமந்தா, கண்மணியாக நயன், மற்றும் ராம்போ வாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ.

இன்று ஏப்ரல் 28ம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. காதல், செண்டிமெண்ட், டைலாக் டெலிவரி, பாசம், நகைச்சுவை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். முகம் சுளிக்கும் அளவிற்கு காட்சிகள் எதுவும் வைக்காமல், அழகாக மூவரின் காதல் கதையை கையாண்டுள்ளார்.

பிகில் படத்தில் விஜய் பெண்களுக்கு ஊக்கம் அளிக்க பேசிய ஒரு வசனத்தை காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் காமெடியாக ரெடின் கின்ஸ்லே பேசுவது போல காட்சி இருக்கிறதாம்.

Leave A Reply

Your email address will not be published.