பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய இணக்கம்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும் அவர் நாளை (04) பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம் நியமிக்கப்படலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றில் பிரதமர் பதவி விலகத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை இராஜினாமா செய்ய வேண்டாம் என்று வற்புறுத்தி வருகின்றனர், இதற்கு முன்னர் பிரதமர் இராஜினாமா செய்யத் தயாராகும் போதும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதேவேளை, தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் (SLPP) அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சைகள் குழுவிற்கும் இடையில் இன்று (02) காலை கொள்கை உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்படி, தேசிய ஒருமித்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.