நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ராஜபக்சவுக்கு வாக்களிக்க சுயேச்சைக் குழு தீர்மானம்!

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ராஜபக்சவுக்கு வாக்களிக்க சுயேச்சைக் குழு தீர்மானம்! அவமானத்தை மறைக்க பொய் நிபந்தனைகளுடன் சஜித்துக்கு கடிதம்!

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சுயாதீனமாக உள்ளதாக தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியீட்டிய பின்னர் , ஒரு அரசாங்கத்தை அமைக்கும் போது , அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பாரா அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் அரசொன்றை அமைப்பாரா என்பது தொடர்பில் தெளிவான உறுதிமொழியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சுயேட்சைக்குழுவொன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. .

தங்களது நிபந்தனைகளுக்கு இணங்கினால் மாத்திரமே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்போம் எனவும் அந்தக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தில் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்சன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்தக் கடிதத்திற்கு அடுத்த வாரத்திற்குள் பதிலளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் அந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.