தமிழ் சினிமா.. பெரிய பட்ஜெட் படங்களை வளைத்து போடும் அனிருத்.

பெரிய படங்கள் என்றாலே அவர் கால்ஷீட் இருக்கிறதா, அவரால் இந்த தேதியில் முடித்துக் கொடுக்க முடியுமா என்று முதலில் அவருடைய உத்தரவை தான் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பெற்றுக் கொள்கின்றனர். அதுமட்டுல்லாமல் பெரிய ஹீரோக்கள் அனைவருமே இவர் தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கின்றனர்.

அந்த அளவுக்கு ஹீரோக்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக மாறி போனவர்தான் அனிருத். இவர் செல்லும் இடமெல்லாம் வெற்றி தான். அதனால் தான் மனுசனுக்கு இப்படி ஒரு மரியாதை. இயக்குனர்கள் என்ன சொன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வார். அவர்கள் கேட்பதற்கு தகுந்தார் போல் செயல்படுவார்.

இவ்வாறு வெற்றி இவரது பாக்கெட்டில் இருக்கும் போது எப்படி இவரை விடுவார்கள். இப்போதைய தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இசை அமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் அனிருத் மட்டும்தான். தற்போது பல திரைப்படங்களுக்கும் இவர் பிஸியாக இசையமைத்து வருகிறார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்த பாட்டுக்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறியுள்ளது. அந்த வகையில் இவர் சமீபத்தில் விஜய்க்காக போட்ட அரபி குத்து பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. குழந்தைகள் முதல் பிரபலங்கள் வரை இந்தப் பாடலுக்கு ஆடாத ஆட்களே கிடையாது. அந்த அளவுக்கு சோசியல் மீடியாவையே கலக்கியது இந்தப் பாடல்.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து இப்போது இவர் கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருக்கிறது. அந்த வகையில் இவர் டான், விக்ரம், இந்தியன் 2, தலைவர் 169 என்று டஜன் கணக்கில் படங்களை வைத்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கமலுக்காக விக்ரம் திரைப்படத்தில் இவர் இசையமைத்த பாடல் நேற்று வெளியானது. பத்தல பத்தல என்று தொடங்கும் அந்தப் பாடல் இப்போது ரசிகர்களின் பேவரைட்டாக மாறியிருக்கிறது. பலரையும் குத்தாட்டம் போட வைத்த அந்தப் பாடல் தற்போது வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

இப்படி திரும்பும் பக்கமெல்லாம் வெற்றியை தக்கவைத்துக் கொண்டிருக்கும் அனிருத் வருங்காலத்தில் ஏ ஆர் ரகுமானை தூக்கி சாப்பிடும் அளவுக்கு திறமையாக இருக்கிறார். இளம் வயதிலேயே சினிமாவில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய இந்த ஒற்றை மனிதனைத்தான் தற்போது தமிழ் சினிமா மொத்தமாய் நம்பியிருக்கிறது. தற்போது இசையமைப்பாளர் இல்லாமல் திணறி வருகிறது தமிழ் சினிமா.

Leave A Reply

Your email address will not be published.