பொருளாதார மாநாடு நடத்த ரணில் திட்டம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையைச் சமாளித்து, அரசியல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்து வருகின்றார்.

இதன்படி உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை பெறும் நோக்கில் ‘பொருளாதார மாநாடு’ ஒன்றை நடத்துவதற்குப் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரியவருகின்றது.

இலங்கையில் பொருளாதார மறுசீரமைப்பு இடம்பெற்றால், உதவிகளை வழங்குவதற்கும், முதலீடுகளை செய்வதற்கும் தயார் என வெளிநாட்டு நிறுவனங்கள்கூட அறிவித்துள்ளன. எனவே, இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களும் முன்வைக்கப்படவுள்ளன.

அதேபோல நன்கொடையாளர் மாநாடு, சுற்றுலாத்துறை மாநாடு உள்ளிட்ட ஏற்பாடுகளும் இடம்பெறவுள்ளன என்று தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.