சடலமாக மீட்கப்பட்ட அட்டலுகம சிறுமி! ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி!

சடலமாக மீட்கப்பட்ட அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

மனிதாபிமானமற்ற விதத்தில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றினையிட்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி
ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அட்டலுகம, பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான சிறுமி பாத்திமா ஆயிஷா நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் இருக்கும் கடைக்குச் சென்று திரும்பும் வழியில் காணாமல் ​போயிருந்தார்.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் பின்னர் நேற்று மாலை சிறுமி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.