சகலரும் இணைந்து செயற்பாட்டால் உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்கலாம் யாழ். பல்கலை பேராசிரியர் கருத்து.

“நாட்டில் எதிர்வரும் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் அனைவரும் இணைந்து செயற்பாட்டால் அதனைத் தவிர்க்க முடியும்.”

இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் விவசாய உயிரியல் துறை பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன் தெரிவித்தார்.

இதற்காக உணவுப பழக்கங்களை மாற்றுவதோடு சிறு தானிய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுகளை களஞ்சியப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.