கிணற்றில் வீழ்ந்தவர் ஆறு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு

இந்தோனேஷியாவின் பாலி தீவில், கிணறொன்றில் வீழ்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் 6 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

29 வயதுடைய ஜாகோப் ரொபேட்ஸ் என்பவர் நாயினால் துரத்திச் செல்லப்பட்ட போது , 4 மீற்றர் ஆழமான கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார்.

இதன்போது அவருடைய கால் ஒன்று முறிந்துள்ளது.

அவர் வீழ்ந்த கிணறு சிறிதளவு நீருடன் , உலர்ந்த நிலையில் காணப்பட்டாலும் கால் உடைந்த காரணத்தினால் அவரால் வெளியேற முடியாமற்போனதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்நிலையில், ஜாகோப் ரொபேட்ஸ் கூக்குரலிட்டதை செவிமடுத்த உள்ளூர்வாசி ஒருவர், அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து மீட்புக் குழுவினரால் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

Comments are closed.