இளையராஜா இசைஞானி ” என்று ஏன் அழைக்கப் பெறுகிறார்?

சிகப்பு ரோஜாக்கள் படத்தை பற்றி ஒரு தகவல் கிடைத்தது.

இப்படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்..

மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டதாம்!

இதையெல்லாம் கேட்கும்போது இளையராஜா குறித்து ஒரு அமானுஷ்யமான பிரமை உண்டாவதை தவிர்க்க முடியவில்லை.

ஏன் என்றால் சமகால இசையமைப்பாளர்கள் ஒரே ஒருபாடலுக்கு ட்யூன் போட பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வதையும் , அதிலும் எனக்கு மிட்நைட்டில்தான் ட்யூன் போடவரும், அமெரிக்காவில்தான் பாடவரும் என சீன் போடுவதையும், பல லட்சம் செலவில் லண்டன்,ஆஸ்திரேலியா,சுவிட்ஸர்லாந்துக்கெல்லாம் போய் ரீரிகார்டிங் செய்வதையும் பார்க்கிற இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் இளையராஜா குறித்த இந்த தகவல்கள் ரொம்பவே ஆச்சர்யமுட்டுபவைதான்.

அந்த படத்தில் வரும் இந்த பாடலை கேளுங்கள் ..

தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா
இன்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன் என் ஆசை (இளைய)ராஜா

மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்
ன ன ன ன ன ன ன ன
இனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்
ன ன ன ன ன ன ன ன ன ன ன னா…

இந்த மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
என் மன்னா…அழகு கண்ணா
காதல் ராஜாங்க பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில்…

ஊரை விட்டு எங்காவது தொலை தூர பயணம் செல்லும்பொழுது பஸ்ஸிலோ, இரயிலிலோ ஜன்னல் அருகில் அமர்ந்து குறைந்த Volume-ல் இந்தப் பாடலைக் கேளுங்கள்.

அந்த சுகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாது. இசை மேதைகள், இசை அறிவாளிகள், இசை வல்லுனர்கள், இசைக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் இருக்கலாம். . .ஆனால் “இசைஞானி” என்று ஏன் அவர் அழைக்கப் பெறுகிறார்?

ஞானம் என்பது இறைவனிடம் இருந்து வருவது. தனக்கு மிகவும் பிரியமான ஒருவனுக்கு இறைவன் விரும்பி அளிப்பது. அந்த ஞானம் நிறையப்பெற்ற இசையமைப்பாளர் “இசைஞானி” ஒருவரே…

Leave A Reply

Your email address will not be published.