ரஜினியுடன் இணையும் சிவகார்த்திக்கேயன்.

‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு மீண்டும் சன்பிக்சர்ஸ் கூட்டணியில் இணைகிறார் ரஜினிகாந்த்.

இவர்கள் இணையும் கூட்டணிக்கு ‘தலைவர் 169’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இப்படம் பற்றிய நமக்கு கிடைத்த முக்கிய தகவல்களை பகிர்கிறோம்.

ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார் என தகவல்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘எந்திரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ரஜினி் பயன்படுத்தவுள்ள கார் என ஓரிரு தினங்களாக ஒரு படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது.

அன்றைய தினத்தில்தான் ரஜினிகாந்த் முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1975 ஆம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்தப் படத்தில் நடிகரும் ரஜினியின் தீவிர ரசிகருமான சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

அவர் இளவயது ரஜினியாக பிளாஷ்பேக் மோஷனில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க உள்ளாராம்.
இப்படம் ஜெயிலர் மற்றும் சிறைக்கைதிகளை மையப்படுத்தி உருவாகிறதாம். எனவே அனைத்து இந்திய & அந்நிய மொழிகளுக்கு ஏற்றவாறு BOSS அல்லது JAILOR ஜெயிலர் என டைட்டில் வைக்க வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.