சுற்றாடல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்த பல்கலைக்கழகத்தில் சுற்றாடல் விஞ்ஞான முதுமாணிப் பரீட்சையில் முதல் இரண்டு பாடங்களில் சித்தியடைந்துள்ளார்.
இதன்படி, திரு. பிரேமதாச சுற்றாடல் கொள்கை திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டில் A +  ( Environmental Policy Planning And Assessment  A+ ) மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரம் மற்றும் முகாமைத்துவத்தில் A – (Environmental Economics And Management A-)ஐப் பெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாச இலங்கையில் சுற்றாடல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் அரசியல் தலைவராகக் கருதப்படுகிறார்.

தற்போது நிலவி வரும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக, சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த பிரச்சினை உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதன்படி, உலகத் தலைவர்கள் இப்போது சுற்றுச்சூழல் விஷயத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.