தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு.

பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு, தெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம்.

தெரிவுக்குழுவில் ஏற்படாத உடன்பாடுகளையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் உள்ளடக்கி இந்த இறுதி அறிக்கையை தெரிவுக்குழு தலைவர் சமர்பித்துள்ளார்.

இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமானால் அங்கும் அதை நாம் எதிர்ப்போம்.

இந்த போலி அறிக்கையை ஏற்க முடியாது என தெரிவுக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.

கலப்பு முறையை ஆதரிக்க முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈபிடீபி) தமக்கு தெரிவித்துள்ளதாக குழு உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவுக்குழுவில் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கலப்பு முறைக்கு இணங்காது என நான் நம்புகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.