நெல் கொள்முதலில் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.. உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..

நெல்கொள்முதலில் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியாய விலைக் கடை மட்டுமல்லாமல் கூட்டுறவு சங்கங்களும் முக்கியம்.. பிற அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வை துவங்கி உள்ளோம்.. மக்களுக்கு உரிய விலையில் பொருட்கள் சேர வேண்டும்.. தமிழ்நாட்டில் 37 உணவு கிடங்குகள் உள்ளன. இதில் சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள ரேஷன் பொருள் உணவு கிடங்கில் ரேஷன் பொருட்கள் எப்படி உள்ளது எங்கிருந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தேன்.

3,477 நியாய விலைக் கடை மூலம் 2.22 கோடி அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் நெல் கொள்முதல் தாமதமாக ஆவதை பற்றி பேசிய அவர், பொது மக்களுக்கு நல்ல முறையில் உணவு கிடைக்க வேண்டும் என்றால், நல்ல முறையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்டசம் 10 ரேசன் கடைகளை ஆய்வு நடத்த வேண்டும் அப்போது தான் மக்களுக்கு சிறந்த முறையில் பொருட்கள் கிடைக்கும் என்றார்.

நெல்கொள்முதல் விரைவாக செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்கப்படும்.. நெல்கொள்முதல் தாமதமாக செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நெல் கொள்முதல் பிரச்சனைகள் தீர்க்கப்படும்..

தற்பொழுது துறை சார்ந்த புதிதாக நடவடிக்கைகள் ஏதாவது எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசின் அமுதம் விற்பனையகம் உலகதரத்தில் தரம் உயர்த்தபடும், குறிப்பாக மக்களை ஏமாற்றி ரேஷன் பொருளை மற்ற மாநிலத்திற்கு எடுத்துச் சென்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த வாரம் என் தலைமையில் டெல்டா மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என்று கூறினார்.. மேலும் ஏசி ரூம் அதிகாரி நான் அல்ல கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு இந்த துறையில் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.