யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு.

“ஏ1, பாரீஸ் ஜெயராஜ்”, போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

அரசியல் காமெடி ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர்., தர்ஷா குப்தா, மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், கேபிஒய் வினோத், கேபிஒய் பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.சித்தார்த் விபின் இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்

Leave A Reply

Your email address will not be published.