வத்தளையிலுள்ள வீடொன்றில் 5 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது.

வீடொன்றில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் 5 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – மாபோல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

சுற்றிவளைப்பின்போது, வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட இரட்டைக்குழல் ரகத்தைச் சேர்ந்த 2 துப்பாக்கிகளும், ஒற்றைக்குழல் ரக துப்பாக்கி ஒன்றும், பொயிட்22 ரகத்தைச் சார்ந்த 2 துப்பாக்கிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், வத்தளை – மாபோல பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் வத்தளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.