அஸ்வினுக்கு கொரோனா உறுதி- இங்கிலாந்து டெஸ்ட் சந்தேகம்..!

இங்கிலாந்துக்கு எதிராக 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தங்களது பயிற்சியை தொடங்கிய நிலையில், அந்த அணியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் இடம்பிடிக்கவில்லை.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன , அதனால் தான் அவர் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு விமானத்தில் பயணப்படவில்லை. இந்த ஆட்டத்திற்கு அவர் சரியான நேரத்தில் அணியுடன் இணைவாரா? என்பது குறித்தும் தெளிவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI ) விதிகளின்படி, அனைத்து வீரர்களும் அந்தந்த வீடுகளில் இருந்து PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அஸ்வினின் சோதனை முடிவு Positive என வந்தது. இதனால் அவர் தன்னை சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

அஸ்வின் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளார், ஆனால் அவர் டெஸ்டுக்கான நேரத்தில் குணமடைவார் என்று BCCI நம்புகிறது.

Leave A Reply

Your email address will not be published.