எரிபொருளுக்காக வீதியில் நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள்.

எரிபொருளுக்காக வீதிகளில் நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காகக் காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி சபைகள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில்,

“நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதால் அதனைப் பெறுவதற்காக நோய் நிலைமை உள்ளவர்களும் எரிபொருளுக்காக மணிக்கணக்காகக் காத்திருக்கின்ற நிலைமையை நான் உணர்கின்றேன்.

ஆகவே, இயன்றவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தற்போதைய தருணத்தில் நீராகாரத்தை வழங்கி உதவுமாறு உள்ளூராட்சி சபைகள், சமூக அமைப்புக்கள் மற்றும் கொடை வள்ளல்கள் ஆகியோரைக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.