இலங்கையின் அதி சிறந்த ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிங் நிறுவனமாக Fimco Estate தேர்வானது

இலங்கையின் அபார்ட்மெண்ட் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைதுறையின் முன்னோடி நிறுவனமான Fimco Estate இலங்கையின் அதிசிறந்த ரியல் எஸ்டேட்மார்க்கெட்டிங் நிறுவனமாக 2022-23ஆம் ஆண்டிற்கான ஆசியா பசுபிக் புரோபர்டி விருது வழங்கும் விழாவில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவின் வெற்றியாளர்களை அறிவிக்கும் வைபவம் 23 ஜுன் 2022 ஆம்திகதி நடைபெற்றது.

ஆசிய பசிபிக் புரோபர்டி விருதுகள் சர்வதேசம் முழுவதும் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

1994ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 29 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள ஆசியா பசுபிக் புரோபர்டி விருதுகள் 45 பிரிவுகளின் கீழ்குடியிருப்பு மற்றும் வணிகதுறைகளுடன் தொடர்புடைய விருதுகள்வழங்கப்பட்டன.

80 இற்கும்மேற்பட்ட சுயாதீன நடுவர்களைகொண்ட குழுவொன்றினால் விருதுவழங்கும் பணி கண்காணிக்கப்பட்டது.

Fimco Estate நிறுவனம் இலங்கையில் அபார்ட்மெண்ட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக தடம்பதித்து அபார்ட்மெண்ட் நிர்மாணிப்பவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு அவற்றை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் சேவையினை வழங்குவதோடு அபார்ட்மெண்ட்டை கொள்வனவு செய்யும் செயற்பாட்டை வாடிக்கையாளர்களுக்கும் இலகுபடுத்தி முக்கியசேவையினை வழங்குகிறது.

Fimco Estate நிறுவனம் அபார்ட்மெண்ட் நிர்மாணிப்பவர்களுக்கு அவற்றை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் பிரத்தியேகமான அதிசிறந்த சேவைகளையும் வழங்குகிறது.

“சந்தைதொடர்பாக கூடியகவனம் செலுத்தி அத்தகவல்களை சிறப்பாக பயன்படுத்தி சந்தைப்படுத்தல் நடவடிக்கைகைளை மேற்கொள்வதே எமது வெற்றியின் இரகசியமாகும்.

இந்தவிருதை வழங்கி எம்மை ஊக்கப்படுத்திய ஆசியாபசுபிக் புரோபர்டி ஏற்பாட்டளர்களுக்கும் அயராது உழைக்கும் எமது ஊழியர்களுக்கும் எம்மீது நம்பிக்கைவைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கும் நன்றி. தொடர்ந்தும் சிறப்பான பலசேவைகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.” என நிறுவனத்தின்தலைமை நிறைவேற்று அதிகாரியான ராஜ்கலீல் தெரிவித்தார்.
Fimco Estate நிறுவனம் www.fimcoestate.com தொடர்ந்தும் வாடிக்கையாளர்களை உச்சமட்டத்தில் திருப்திபடுத்தி மேலும் பல வெற்றிகளை பெற்று முன்னோக்கிச் செல்வதற்கு தயாராக உள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி ராஜ்கலீல் மேலும் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.