‘மே – 09’ வன்முறை: 3,056 பேர் சிக்கினர் தொடர்கின்றது கைது வேட்டை.

கடந்த மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, அன்றைய தினம் இடம்பெற்ற 857 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை மொத்தமாக 3 ஆயிரத்து 56 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 1,150 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.