வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் திருகோணமலைக் கடலில் கைது!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவதற்காகக் கடற்படையினரால் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுக்கின்றன. இந்தநிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது படகொன்றுடன் குறித்த 51 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானாவர்களில் கடத்தல்காரர்கள் 6 பேர் உட்பட 41 ஆண்களும், 5 பெண்களும் மற்றும் 5 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 முதல் 56 வயதுக்குட்பட்டவர்களாவர்.

இவர்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.